Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Health and Diseases

Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Health and Diseases

அறிவியல் : அலகு 21 : உடல் நலம் மற்றும் நோய்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி

  1. நிக்கோட்டின்
  2. டானிக் அமிலம்
  3. குர்குமின்
  4. லெப்டின்

விடை ; நிக்கோட்டின்

2. உலக புகையிலை எதிர்ப்பு தினம்

  1. மே 31
  2. ஜுன் 6
  3. ஏப்ரல் 22
  4. அக்டோபர் 2

விடை ; மே 31

3. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை

  1. வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
  2. பிளவுக்கு உட்படுவதில்லை
  3. திடீர்மாற்றமடைந்த செல்கள்
  4. துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

விடை ; துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை

  1. கார்சினோமா
  2. சார்க்கோமா
  3. லுயூக்கேமியா
  4. லிம்போமா

விடை ; லிம்போமா

5. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது

  1. ஞாபக மறதி
  2. கல்லீரல் சிதைவு
  3. மாயத் தோற்றம்
  4. மூளைச் செயல்பாடு குறைதல்

விடை ; கல்லீரல் சிதைவு

6. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்

  1. ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
  2. பெரிகார்டியத்தின் வீக்கம்
  3. இதய வால்வுகள் வலுவிழப்பு
  4. இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

விடை ; இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

7. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ———————– என்று பெயர்.

  1. லுயூக்கேமியா
  2. சார்க்கோமா
  3. கார்சினோமா
  4. லிம்போமா

விடை ; கார்சினோமா

8. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது

  1. வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
  2. தீங்கற்ற கட்டி
  3. அ மற்றும் ஆ
  4. மகுடக் கழலை நோய்

விடை ; வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

9. பாலிபேஜியா என்ற நிலை ——————-ல் காணப்படுகிறது.

  1. உடற்பருமன்
  2. டயாபடீஸ் மெல்லிடஸ்
  3. டயாபடீஸ் இன்சிபிடஸ்
  4. எய்ட்ஸ்

விடை ; டயாபடீஸ் மெல்லிடஸ்

10. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

  1. கண்கள்
  2. செவி உணர்வுப் பகுதி
  3. கல்லீரல்
  4. மைய நரம்பு மண்டலம்

விடை ; மைய நரம்பு மண்டலம்

II.  கீழ்க்கண்டவற்றை சரியா, தவறா எனக் கூறுக. தவறுகள் ஏதுமிருப்பின் திருத்தி எழுதுக.

1. எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்) ( சரி )

2. புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர். ( சரி )

3. உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும். ( தவறு )

  • புற்றுநோய் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்

4. வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது. ( தவறு )

  • வெள்ளையணுக்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

5. நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது. ( சரி )

6. நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது. ( சரி )

7. இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது. ( தவறு )

  • இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-1 உருவாகிறது.

8. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும். ( சரி )

9. நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து. ( தவறு )

  • நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து இல்லை.

10. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது. ( தவறு )

  • சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

III. கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக

1. IDDMInsulin Dependent Diabetes Mellitus
2. HIVHuman Immunodeficiency Virus
3. BMIBody mass index
4. AIDSAcquired Immunedeficiency Syndrome
5. CHDCoronary heart disease
6. NIDDMNon-Insulin Dependent Diabetes Mellitus

IV. பொருத்துக

  1. சார்க்கோமா – வயிற்று புற்றுநோய்
  2. கார்சினோமா – அதிகப்படியான தாகம்
  3. பாலிடிப்சியா – அதிகப்படியான பசி
  4. பாலிபேஜியா – இதயத்தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை
  5. இதயத்தசை நசிவுறல் நோய் – இணைப்புத்திசு புற்றுநோய்

விடை ; 1 – E, 2 – A, 3 – B, 4 – C, 5 – D

V. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ——————– அதிகப்படியாக பயன் படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.

விடை ; ஆல்கஹால்

2. புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் ———————-

விடை ; நிக்கோட்டின்

3. இரத்தப் புற்றுநோய்க்கு ————————- என்று பெயர்.

விடை ; லூக்கிமியா

4. சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு ——————– எனப்படும்.

விடை ; மருந்துக்கு அடிமையாதல்

5. இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது —— நீரிழிவு நோயின் நிலை.

விடை ; வகை – 2

VI. ஒப்புமை வகை வினாக்கள்.

முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட இடத்தில் எழுதுக.

அ) தொற்று நோய் : எய்ட்ஸ் : தொற்றா நோய் : ——————–

விடை ; டையப்படிஸ் மெல்லிடஸ்

ஆ) கீமோதெரபி : வேதிப்பொருள்கள் : கதிர்வீச்சு : ——————–

விடை ; கதிர்

இ) உயர் இரத்த அழுத்தம் : ஹைப ர் கொலஸ்டீரோலோமியா : கிளைகோசூரியா ——————–.

விடை ; ஹைப்பர் கிளைசிமியா

VII. ஒரு வாக்கியத்தில் விடையளி

1. மனோவியல் மருந்துகள் என்றால் என்ன?

மூளையின் மீது செயல்பட்டு, அவற்றின் செயல்பாடுகளான நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றியமைக்கும் மருந்துகளை மனநிலை மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன

2. புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.

  • மூச்சுக்குழல் அலர்ஜி
  • நுரையீரல் காசேநாய்
  • எம்பைசீமா
  • ஹைபாக்சியா
  • அதிக இரத்த அழுத்தம்
  • இரப்பை மற்றும் முன் சிறுகுடல் புண்

3. உடற்பருமனுக்குக் காரணமான காரணிகள் எவை?

  • மரபியல் காரணிகள்
  • உடல் உழைப்பின்மை,
  • உணவுப் பழக்க வழக்கங்கள் (அளவுக்கதிகமாக உண்ணுதல்)
  •  நாளமில்லா சுரப்பிக் காரணிகள்

4. வயது முதிர்ந்தோர் நீரிழிவு என்றால் என்ன?

வகை – 2 இன்சுலின் சாராதா நீரிழிவு நோய் (NIDDM)

5. மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?

புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

6. இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?

கணையத்தில் உள்ள β செல்களின் சிதைவினால் இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது

VIII. குறுகிய விடையளி

1. HIV பரவக்கூடிய பல்வேறு வழிகளைக் கூறுக?

  • பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளுதல்.
  • போதை மருந்து ஊசி பயன்படுத்துவோர் இடையே நோய்த் தொற்று ஊசிகள் மூலமாகப் பரவுதல்.
  • பாதிக்கப்பட்ட நபரின் நோய்த் தொற்றுடைய இரத்தம் மற்றும் இரத்தப் பொருள்களைப் பெறுவதன் மூலம் பரவுதல்.
  • பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய்சேய் இணைப்புத்திசு மூலம் பரவுதல்.

2. புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான செல் பிரிதலை மேற்கொள்வதில்லை.

3. வகை-1 மற்றும் வகை-2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக.

காரணிகள்வகை-1வகை-2
நோயின் தாக்கம் 10 – 20%80 – 90%
தொடங்கும் பருவம்இளம்பருவத்தில் தொடங்குகிறது. (20 வயதுக்கு குறைவானோர்)வயதானோரில் காணப்படுகிறது. (30 வயதிற்கு மேற்பட்டோர்)
உடல் எடைசாதாரணமான உடல் எடை அல்லது எடை குறைதல் உடல்பருமன்
குறைபாடுபீட்டா செல்கள் அழிவதால் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது.இலக்கு செல்கள் இன்சுலினுக்கு பதில் வினை புரியாமல் இருப்பது.
சிகிச்சைஇன்சுலினை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகிறது

4. உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைப்பதன் அவசியம் என்ன ?

  • குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், கட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட், கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பவைகளாகும்.
  • எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும்.

5. இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக.

  • குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல்
  • நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள்
  • குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றை குறைவாக உட்கொள்ளுதல்
  • அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும்.
  • ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்

IX. விரிவான விடையளி

1. மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.

கல்வி மற்றும் ஆலோசனை

கல்வி மற்றும் தகுந்த ஆலோசனைகள், மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவும்.

உடல் செயல்பாடுகள்

மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள், நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடம் உதவியை நாடுதல்

சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். தங்களது பதட்டமான உணர்வுகள், தவறான செயல்களைக் குறித்துப் பேசுவதன் மூலம், மேலும் அத்தவறுகளைச் செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.

மருத்துவ உதவி

உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.

மதுவிலிருந்து மீட்பு (de-addiction) மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவிகரமாக உள்ளன. இதனால் அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, இயல்பான மற்றும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

2. இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.

குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உடகொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும். அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும். நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.

உடல் செயல்பாடுகள்

நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.

அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்

ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

1. ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் கொழுப்பின் பங்கு என்ன ?

  • இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை.
  • பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது.
  • கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது.
  • இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம்.
  • இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்கச் செய்வதன் மூலம், ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது.
  • மேலும் இது திடீரெனத் தோன்றும் இஸ்கிமியா (இதயத் தசைகளுக்கு குறைவான இரத்த ஓட்டம்) மற்றும் இதயத் தசை நசிவுறல் (இதயத் தசை திசுக்களின் இறப்பு) நோய்க்கு வழிவகுக்கிறது.

2. குப்பை உணவுகளை உண்பதாலும், மென் பானங்களைப் பருகுவதாலும் உடற்பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள்ஏற்பட்ட போதிலும், குழந்தைகள் அதனை விரும்புகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகளைக் கூறுக.

குப்பை உணவுகளினல் அதிகமான குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு, மற்றும் குறைந்தளவு ஊட்டசத்த்து உள்ளது. இதை அதிகப்படியான உட்கொள்வதால் சத்தான உணவை உட்கொள் முடியவில்லை. ஆதலால் குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

3. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள் யாவை?

  • மாரடைப்பு வருவது குறைக்கப்படுகிறது.
  • உடல் எடையை  சரியான அளவில் வைத்துக் கொள்ளலாம்.
  • இரத்த கொழுப்பு குறைக்க பயன்படுகிறது.
  • வகை-2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய் மற்றும் சில புற்று நோய் வராமல் தடுக்கலமாம்
  • குறைந்த இரத்த அழுத்தம்.

4. ஒரு முன்னணி வார இதழ் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மக்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீ இந்த நாளிதழின் அறிக்கையை உன் வகுப்பிலும், உன் வகுப்பிலுள்ள குழுவினரிடமும் விவாதித்து, இந்த அச்சமூட்டும் நோய்க்கு எதிராக செயல்படுதல் குறித்து மக்களுக்கு உதவுவது பற்றி முடிவெடுக்கவும்.

அ) உன்னுடைய பள்ளிக்கு அருகாமையிலுள்ள கிராம மக்களுக்கு நீ மேற்கூறியவற்றை தெரிவிக்கும் போது உனக்கு ஏற்படும் சிரமங்கள் யாவை?

நாம் போதுமான குறிக்கோலில் உணர்ச்சியரமாக இல்லை, மக்கள் நினைப்பில் பாலியல் கருத்துகளில் தன்மைகள் மாறி மாறி இருக்கின்றன. அதை பற்றி பேசுவது குறைவு. பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வு. “மற்றவர்களின் வாரத்தைகள் மற்றும் பார்வை, இதனால் எய்ட்ஸ் (HIV) விழிப்புணர்வு உருவாகிறது.

ஆ) இச்சிக்கலுக்கு நீ எவ்வாறு தீர்வு காண்பாய் ?

இதைன பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போஸ்டர், நோயின் தன்மை, விளைவு ஆகியவற்றை எடுத்துரைத்தல்.

XI. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்

1. போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால், அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை ஏன் ?

  • இது மூளையின் நரம்புகளில் ஒரு சந்தோஷமான உணர்வை கொடுக்கிறது
  • மது அருந்துவருக்கு உடல் நிலையில் மது இல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு பய உணர்வு, உடல் நடுக்கம், முடிவில்லா நிலையில் மற்றும் கொலப்பங்களுடன் இருக்க முடிகிறது.

2. புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிக.

புகைபிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.

3. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.

  • குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் மிகவும் பொருத்தமானவை.
  • கார்போஹைட்ரேட்டுகள் ஸ்டார்ச் மற்றும் சிக்கலான சர்க்கரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
  • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (சுக்ரோஸ், குளுக்கோஸ்) எடுத்துக் கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
  • நாள்தோறும் முழு தானியங்கள், சிறு தானியங்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு) கீரை வகைகள், கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி போன்றவற்றை உள்ளடக்கியதாக உணவு முறை அமைய வேண்டும்.
  • மொத்த கலோரி மதிப்பில் 50 – 55% அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்.
  • அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பெற 10 – 15% புரதம் கொண்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மொத்த கலோரியில் 15 – 25% கொழுப்பைக் கொண்டிருக்க வேண்டும். நிறைவுற்ற கொழுப்பினை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

4. மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது?

  • இரத்த வங்கியிலிருந்து இரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட வகை இரத்தமானது HIV சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
  • மருத்துவமனைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பாதுகாப்பான பாலுறவு மற்றும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
  • எய்ட்ஸ் நோயின் விளைவுகளை விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் அறிவுறுத்த வேண்டும்.
  • எய்ட்ஸ் / HIV நபர்களை குடும்பம் மற்றும் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்துதல் கூடாது.

XII. கூற்று மற்றும் காரணம்

கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும்ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுகின்றன.

காரணம்: மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் குலைக்கின்றன

  • ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

2. கூற்று: டயாபடீஸ் மெல்லிடஸ் நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு குளுக்கோஸ் வெளியேறுவதைக் காணலாம்.

காரணம்: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில்லை.

  • அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *