சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ………………………..
- குடியரசுத்தலைவர்
- நாடாளுமன்றம்
- உச்சநீதிமன்றம்
- பிரதம அமைச்சர்
விடை : உச்சநீதிமன்றம்
2. ……………………..க்கு இடையே பிரச்சனைகளக்கு தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்கிறது
- குடிமக்கள்
- குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
- இரண்டு மாநில அரசாங்கங்கள்
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கூறிய அனைத்தும்
3. கீழ்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது
- முதன்மை அதிகார வரம்பு
- மேல்முறையீட்டு அதிகார வரம்பு
- ஆலோசனை அதிகார வரம்பு
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : முதன்மை அதிகார வரம்பு
4. பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளது?
- பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
- அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
- பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
- உத்திரபிரதேசம் மற்றும் பீகார்
விடை : பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
5. பொது நல வழக்க முறை இந்தியாவில் ………………. ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- உச்ச நீதிமன்றம்
- நாடாளுமனறம்
- அரசியல் கட்சிகள்
- அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்
விடை : உச்ச நீதிமன்றம்
6. இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
- ஒன்று
- இரண்டு
- மூன்று
- நான்கு
விடை : ஒன்று
7. உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்
- சண்டிகர்
- பம்பாய்
- கல்கத்தா
- புது தில்லி
விடை : புது தில்லி
8. FIR என்பது
- முதல் தகவல் அறிக்கை
- முதல் தகவல் முடிவு
- முதல் நிகழ்வு அறிக்கை
- மேற்கூறிய எவையுமில்லை
விடை : முதல் தகவல் அறிக்கை
9. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ……………………. என அழைக்கப்படுகின்றன
- மாவட்ட நீதிமன்றங்கள்
- அமர்வு நீதிமன்றங்கள்
- குடும்ப நீதிமன்றங்கள்
- வருவாய் நீதிமன்றங்கள்
விடை : அமர்வு நீதிமன்றங்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____________ நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்
விடை : கல்கத்தா
2. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் _____________ மற்றும் _____________ உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
விடை : சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை
3. புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான _____________ ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தார்
விடை : மாண்ட்டெஸ்கியூ
4. _____________ பணம், சொத்த, சமூகம் தொடர்பான பிரச்சனைகளை கையாளுகிறது
விடை : உரிமையியல் சட்டங்கள்
5. பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் _____________ நீதியை வழங்கின
விடை : தர்மத்தின்படி
III.பொருத்துக
| 1. உச்சநீதி மன்றம் | சமூக கடமைகள் |
| 2. உயர் நீதிமன்றம் | விரைவான நீதி |
| 3. லோக் அதாலத் | இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம் |
| 4. சர் எலிஜா இம்ஃபே | மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம் |
| 5.ஸ்மிருதி | முதல் தலைமை நீதிபதி |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – உ, 5 – அ
IV. சரியா / தவறா என்று குறிப்பிடுக
1. 1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கபட்டது
விடை : தவறு
2. துக்ளக் ஆட்சிக் காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபு மொழியில் எழுதப்பட்டன
விடை : சரி
3. 1733ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்ச நீதிமன்றம் அமைப்பதற்கு வழி வகுத்தது
விடை : சரி
4. சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதி மன்றமாகும்
விடை : தவறு
5. இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்
விடை : சரி
6. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களக்கான நீதியை பாதுகாக்கிறது.
விடை : சரி
V. சரியான கூற்றைத் தேர்தெடு
1. பின்வரும் கூற்றை ஆராய்க
i. மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
ii. இது இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை
- i மட்டும்
- ii மட்டும்
- i மற்றும் ii
- இரண்டும் இல்லை
விடை : i மற்றும் ii
2. பின்வரும் கூற்றை ஆராய்க
i. இந்திய தண்டனைச் சட்டம் 1860 இல் உருவாக்கப்பட்டது
ii. கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862 இல் நிறுவப்பட்டது
iii. 1935 ஆம் ஆண்ட இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை
- i மட்டும்
- ii மற்றும் iii மட்டும்
- i. iii மட்டும்
- அனைத்தும்
விடை :அனைத்தும்
3. இந்திய உச்ச நீதிமன்றம் பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல
i. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றம் ஆகும்.
ii. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ்பகுதி V-இன் படி நிறுவப்பட்டது
iii. ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியாது.
iv. இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை
- i
- ii
- iii
- iv
விடை : iii
4. கூற்று : உச்ச நீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பாராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
- கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
விடை : கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
5. ஆம் / இல்லை எனக் கூறுக
அ. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்
விடை : ஆம்
ஆ. பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர்
விடை : இல்லை
இ. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர்
விடை : ஆம்
ஈ. அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது
விடை : ஆம்
VI. பின்வருவனவற்றிற்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி
1. நீதித்துறை அமைப்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
அனைவருக்கும முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதித்துறை அமைப்பு நமக்கு தேவைப்படுகிறது
2. இந்திய நீதிமன்றங்களின் பல்வேறு படிநிலைகள் யாவை?
இந்திய உச்ச நீதிமன்றம் – உயர் நீதிமன்றம் – மாவட்ட நீதிமன்றம் – துணை நீதிமன்றங்கள்
3. சட்டம், நீதித்துறை வேறுபடுத்துக
| சட்டம் | நீதித்துறை |
| இது மக்களை ஆள்வதற்க ஒர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும் | சட்டப்படி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது |
4. மக்கள் நீதிமன்றம் பற்றி குறிப்பு எழுதுக
- விரைவான நீதியை வழங்க லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
- இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனைகளக்கு தீர்வு காண்கிறது.
5. நடமாடும் நீதிமன்றங்களின் நன்மைகள் யாவை?
கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி அவர்களது செலவைக் குறைத்து, அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.
VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக
1. நீதித்துறையின் பங்கு பற்றி எழுதுக
- ஒரு நாட்டின் நீதி அமைப்பு அனைவருக்கும் முறையான நீதி கிடைப்பதை உறுதி செய்ய திறனுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது
- இந்தியா ஒன்றிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.
- அரசாங்கத்தின் ஓர் அங்கமாக நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது
- இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளை தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்கிறது.
2. உரிமையில் சட்டம், குற்றவியல் சட்டம் – வேறுபடுத்துக
| உரிமையில் சட்டம் | குற்றவியல் சட்டம் |
| 1. இது பணம், சொத்து மற்றும் சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.எ.கா. நிலம், வாடகை, திருமணம் தொடர்பான பிரச்சனைகள் | குற்றம் என சட்டம் வரையறுக்கும் நடத்தைகள் அல்லது செயல்களை இது விசாரிக்கிறது.எ.கா. திருட்டு, கொலை, பெண்களைத் துன்புறுத்தல் ஆகியன |
| 2. உரிமையியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களால் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும் | இது வழக்கமாக காவல்துறை விசாரணையுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதன் மூலம் தொடங்குகிறது. |
| 3. மனுதாரரின் கோரிக்கையின்படி பபணம் செலுத்தும்படியான தண்டனைகள் வழங்கப்படுகிறது | குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் சிறைக்கு அனுப்பப்படுவார் |
3. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விவரி
முதன்மை அதிகார வரம்பு
இது மத்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்
மேல்முறையீட்டு அதிகார வரம்பு
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.
ஆலோசனைஅதிகார வரம்பு
குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்தவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது
நீதிப் பேராணை அதிகார வரம்பு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32-ன் படி உச்ச நீதிமன்றமும் சட்டப்பிரிவு 226-ன் படி உயர்நீதிமன்றமும் நீதிப்பேராணைகளை வழங்குகின்றன
ஆவண நீதிமன்றம்
இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது மற்றம் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
சிறப்பு அதிகாரங்கள்
இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டை கண்காணிக்கிறது
Government Job Preparation & Skill Building
Solving Book Back questions is the most effective way to score high in both school exams and Tamil Nadu Government competitive exams. Whether you are preparing for Group 4, VAO, or Police Constable exams, these basics are mandatory. To increase your employability, we recommend pursuing professional certification courses in computer science or digital marketing. Check the latest TN Govt Job notifications regularly and consider banking exam coaching to broaden your career horizons.
