Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Exploring Continents North America and South America

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Exploring Continents North America and South America

சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் ……… பிரிக்கிறது. 

அ) பேரிங் நீர் சந்தி

ஆ) பாக் நீர் சந்தி 

இ) மலாக்கா நீர் சந்தி

ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி

விடை: அ) பேரிங் நீர் சந்தி 

2. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது. 

அ) மெக்ஸிகோ

ஆ) அமெரிக்கா 

இ) கனடா

ஈ) கியூபா

விடை: ஈ) கியூபா 

3. ………. வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும். 

அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி 

ஆ) மெக்கென்ஸி ஆறு 

இ) புனித லாரன்சு ஆறு

ஈ) கொலரடோ ஆறு

விடை: அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி 

4. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் …. 

அ) ஆன்டிஸ்

ஆ) ராக்கி 

இ) இமயமலை

ஈ) ஆல்ப்ஸ்

விடை அ) ஆன்டிஸ் 

5. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் …………….. வடிநிலப்படுகை தினந்தோரும் மழை பெறுகிறது. 

அ) மெக்கென்ஸி

ஆ) ஒரினாகோ 

இ) அமேசான்

ஈ) பரானா

விடை: இ) அமேசான் 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ……… கடல்  மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது. 

விடை: மரண பள்ளத்தாக்கு

2. உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக ……… விளங்குகிறது. 

விடை: கிராண்ட் பேங்க் 

3. சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள ……… ஆண்டிஸ்  மலைத்தொடரின் உயரமான சிகரமாகும். 

விடை: அகான்காகுவா சிகரம்

4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ……… உலகின் நுரையீரல்  என அழைக்கப்படுகிறது.

விடை: அமேசான் காடுகள்

5.  ……… ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு .

விடை: பிரேசிலி

III. பொருத்துக 

I    II

1. மெக்கென்லீ சிகரம் – அ. வெப்ப மண்ல காடுகள் 

2. கிராண்ட் கேன்யான் – ஆ. பறக்க இயலாத பறவை 

3. எபோனி – இ. கொலரடோ ஆறு 

4. நான்கு மணி கடிகார மழை – ஈ. 6194 மீ

5. ரியா – உ பூமத்திய ரேகை பகுதி 

விடைகள் 

1. மெக்கென்லீ சிகரம் – ஈ. 6194 மீ

2. கிராண்ட் கேன்யான் – இ. கொலரடோ ஆறு

3. எபோனி – அ. வெப்ப மண்ல காடுகள்

4. நான்கு மணி கடிகார மழை – உ பூமத்திய ரேகை பகுதி

5. ரியா – ஆ. பறக்க இயலாத பறவை

IV. காரணம் கூறுக 

1. வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது. 

வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது. 

ஏனெனில் 

* தெற்குப் பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளும் கோடைகாலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன. 

* சூடான ஈரப்பதம்மிகுந்த தென்மேற்குப் பருவக்காற்றுகள் வட அமெரிக்காவின்வடமேற்குப் பகுதிகளுக்கு மழைப்பொழிவை தருவதோடு அல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது. 

2. அமெரிக்கா “உருகும் பானை” என அழைக்கப்படுகிறது. 

அமெரிக்கா உருகும் பானை என அழைக்கப்படுகிறது. 

ஏனெனில்

* அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன. 

3. கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது. 

கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது. 

ஏனெனில் 

* அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்தியரேகை செல்கிறது. இங்கு வெப்ப காலநிலை காணப்படுகிறது. 

* அதே அட்சரேகையில் ஆன்டஸ் மலைகளின் மேல் அமைந்திருக்கும் கியுடோ 9350 அடி கடல் மட்டத்திற்கு மேல் அமைந்து மிதமான காலநிலையை கொண்டுள்ளது. 

4. வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு. 

வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு. 

ஏனெனில்

* ஹம்போல்ட் (பெரு) குளிர் நீரோட்டம் பிளாங்டன்களை (மீன்களின் முக்கிய உணவு) பெரு நாட்டிற்கு அருகில் கொண்டு சேர்க்கிறது.  

* ஆழ்கடல் மீன் தொழில் பெரு கடற்கரையில் 3000 கி.மீ. வரை கடலுக்குள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

* 50க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன. 

* பெருவின் கடற்கரையில் 40க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

V. வேறுபடுத்துக 

1. ராக்கி மலைகள் மற்றும் அப்பலேஷியன் மலைகள் 

ராக்கி மலைகள்

1. நீண்ட மலைத் தொடர்களான இளம் மடிப்பு மலைகள்.

2. (உயர்பீடபூமிகள், குறுகிய பள்ளத்தாக்குகள், அகன்ற ஆற்றுப்படுகைகளைக் கொண்டது.

3. நீளம் 4800 கி.மீ. அகலம் 110 கி.மீ முதல் 480 கி.மீ. வரை

4. மெக்ஸிகன், கொலரடோ, கொலம்பியா பீடபூமிகள் உள்ளன.

5. பல இயங்கும் எரிமலைகளைக் கொண்டுள்ளது. நில அதிர்வுகளையும் எதிர்கொள்கிறது.

அப்பலேஷியன் மலைகள் 

1. இம்மலைகள் தொடர்ச்சியானவை அல்ல. பழைய மடிப்பு மலைகள் 

2. 1800 மீட்டருக்கு மேல் உயரமான மிகச் சில சிகரங்கள் உள்ளன. 

3. உயரம் குறைந்தது மற்றும்  அகன்றது. 

4. கிரீன்லாந்து, லாப்ரடார் பீடபூமிகள் உள்ளன. 

5. கனிம வளங்கள் நிறைந்தது.

2. பிரெய்ரி மற்றும் பாம்பாஸ் புல்வெளிகள் 

பிரெய்ரி புல்வெளிகள்

1. கடுங்குளிர்காலம், வெப்பமான குறுகிய கோடைகாலம், மிதமான மழைபொழிவு.

2. மத்திய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மத்திய கனடா.

3. தாவரங்கள்: புற்கள், முட்புதர்கள் மற்றும் மூலிகைகள்

4. விலங்குகள்: கொயோடோ நாய், வளை தோண்டும் கொறி விலங்கு வகை, குழி முயல், புல்வெளி நாய், காட்டு எருமை.

பாம்பாஸ் புல்வெளிகள் 

1. மிக வெப்பமான கோடைகாலம், குளிரான குளிர்காலம், மிதமான மழை. 

2. வடகிழக்கு அர்ஜென்டினாவின் வடகிழக்குப்  பகுதிகள், உருகுவே மற்றும் தெற்கு பிரேசில். 

3. தாவரங்கள்: குட்டையான புற்கள்

4. விலங்குகள்: ரியா, சாம்பார் மான், ஜாகுவார், ஒட்டகம், மியூல் மற்றும் கலைமான்.

3. துந்திர பகுதி மற்றும் டைகா பகுதி 

துந்திர பகுதி

1. நீண்ட கடுமையான கடும் குளிர். குறுகிய குளிர்ச்சியான கோடைகாலம், மிகக் குறைந்த மழைப்பொழிவு.

2. கனடாவின் வடக்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும்  வட தீவுகள் துந்திர பகுதி.

3. தாவரங்கள்: பாசிகள். மரப்பாசிகள் மற்றும் குள்ளமான வில்லோ மரங்கள்.

4. விலங்குகள்: ஆர்க்டிக் நரி, கலைமான், கஸ்தூரி எருது, பனிக்கரடி, வால்வரின், சாபில் மற்றும் நீலநரி.

டைகா பகுதி

1. குளிரான குளிர்காலம், வெப்பமான  குறுகிய கோடைகாலம், குளிர் காலத்தில் மிக அதிக பனிப்பொழிவு. 

2. தென் மத்திய அலாஸ்கா மற்றும் வடகிழக்கு கனடா டைகா பகுதி.

3. தாவரங்கள்: பைன், பின், தேவதாரு மற்றும் ஸ்புரூஸ். 

4. விலங்குகள்: நீர்நாய், நரி, வெள்ளை கீரி, ஸ்கங்க், கலைமான், கடமான், காட்டுமான், கருப்பு கரடிகள், கிரிஸ்லி கரடிகள்

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை () டிக் செய்யவும் 

1. கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது. 

காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன. 

அ) கூற்றும் காரணமும் சரி. 

ஆ) கூற்று சரி. காரணம் தவறு. 

இ) காரணம் தவறு. கூற்று சரி. 

ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.

விடை: அ) கூற்றும் காரணமும் சரி, 

2. கூற்று (A) : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. 

காரணம் (R) : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி. 

ஆ) கூற்று சரி. காரணம் தவறு. 

இ) கூற்று தவறு. காரணம் சரி. 

ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.

விடை: இ) கூற்று தவறு. காரணம் சரி. 

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும். 

1. வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக. 

வட அமெரிக்காவின் எல்லைகள்: 

* வடக்கு – ஆர்க்டிக் பெருங்கடல் 

* கிழக்கு – அட்லாண்டிக் பெருங்கடல் 

* மேற்கு – பசிபிக் பெருங்கடல்

* தெற்கு – தென் அமெரிக்கா 

2. மெக்கன்சி ஆறு பற்றி குறிப்பு வரைக. 

மெக்கன்சி ஆறு: 

* மெக்கன்சி ஆறு வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருக்கிறது. 

* இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது. 

3. வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக. 

சிட்ரஸ் வகை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. 

பழங்களின் பட்டியல்:

* கிரான்பெரீஸ்

* ப்ளூபெர்ரி 

* கான்கார்ட் திராட்சைகள் 

* ஸ்ட்ராபெர்ரி 

* நெல்லிக்கனி

4. எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.

எஸ்கிமோவின் வாழ்க்கை முறை: 

* எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் வாழ்கிறார்கள் (மீன்கள் அதிகம் கிடைக்குமிடங்கள்). 

* விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்துகிறார்கள். இஃலூக்களில் வாழ்கிறார்கள். 

* இவர்களால் சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலை. எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். 

5. வட அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள் யாவை? 

வட அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள்: 

* வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதி

* கிரேட் ஏரி பகுதி 

* மெக்ஸிகோ

* மத்திய அமெரிக்கா 

6. தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக. 

தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகள்: 

* ஆன்டஸ் மலைத்தொடர் 

* ஆற்றுப்படுகை (அல்லது) மத்திய சமவெளிகள்

* கிழக்கு உயர்நிலங்கள் 

7. 4 மணி கடிகார மழை’ என்றால் என்ன? 

4 மணி ‘கடிகார மழை’: 

* பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது. 

* இந்நிகழ்வு பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது, எனவே இது 4 மணி ‘கடிகார மழை என்று அழைக்கப்படுகிறது. 

8. தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பட்டியலிடுக. 

தென் அமெரிக்க வெப்ப மண்டலக் காடுகள் (பூமத்திய ரேகை காடுகள்): 

தாவரங்கள் : 

* ரப்பர் 

* சீமைத்தேக்கு

* கருங்காலி 

* லாக்வுட் 

* சிபா

* பிரேசில் கொட்டை 

விலங்குகள்: 

* அனகோண்டா 

* ஆர்மாடில்லோஸ் 

* பிரன்ஹா

* குரங்கு 

* பாம்பு 

* முதலை

* கிளிகள் 

9. எஸ்டான்சியாஸ் என்றால் என்ன? 

எஸ்டான்சியாஸ்: 

* கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்டான்சியாஸ் என அழைக்கப்படுகின்றன. 

10. தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளை கூறுக.

தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்: 

* சர்க்கரை 

* காபி

* கொக்கோ 

* புகையிலை 

* மாட்டிறைச்சி 

* சோளம்

* கோதுமை 

* பெட்ரோலியம் 

* ஆளி விதை 

* இயற்கை எரிவாயு 

* பருத்தி 

* இரும்புத்தாது 

* தாமிரம்

VIII. பத்தியளவில் விடையளி 

1. வட அமெரிக்காவின் கால நிலை பற்றி விளக்குக. 

வட அமெரிக்காவின் காலநிலை: 

* அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தூந்திர பகுதி வரை வட அமெரிக்கக் கண்டம் பரவியுள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பலதரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன. 

* ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை. மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் நீண்ட கடுங்குளிரும் குறுகிய வெப்ப கோடையும் காணப்படுகிறது. – 

* சூறாவளி புயல்களால் மழைப்பொழிவு உண்டாகிறது. மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.  

* தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி முகத்துவார பகுதிகள் மற்றும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் வடகிழக்குப் பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன. 

* அலாஸ்கா வெப்ப நீரோட்டம் வடமேற்கு கடற்கரை பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது. மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது. 

2. வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை பற்றி எழுதுக. 

வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை: 

கனரக பொறியியல் தொழிற்சாலைகள் என்பவை

– கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்கள் 

– பெருமளவிலான எரிபொருள் 

– பெருமளவிலான மூலதனம் 

– பெருமளவிலான போக்குவரத்து செலவினங்கள் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள். 

* இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன. 

* ஆட்டோமொபைல் தொழிற்சாலை. வான்ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை, விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும். 

* ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. 

* முக்கிய கனரக தொழில் மையங்கள் : டெட்ராய்ட, சிக்காகோ. பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா மற்றும் கனடாவின் வின்ஸர். 

3. தென் அமெரிக்காவின் ஆறுகள் பற்றி விவரிக்கவும்.

தென் அமெரிக்காவின் ஆறுகள்: 

* இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. 

* குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன. பெரு

* கடற்கரையோர ஆறுகள் சில நீர் பாசனத்திற்கும். நீர் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுகின்றன. 

* அமேசான் தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு மற்றும் உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும். 

* ஆயிரக்கணக்கான கிளை நதிகள்

* ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் முக்கியமானவை. 

* கிளை நதிகள் கடலில் கலக்கும் இடம் விரிவானது; வேகமானது (80 கி.மீ. தூரம் நன்னீர்)

* ஓரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் தொடங்குகிறது. வடக்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது. 

* பராகுவே ஆறு இரு முக்கிய கிளை நதிகளைக் கொண்டது (பரானா மற்றும் உருகுவே). இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப்படுகை என அழைக்கப்படுகிறது. 

* அனைத்து ஆறுகளும் முகத்துவாரத்திலிருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. 

4. தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள் பற்றி எழுதுக. 

தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள்: 

* தென் அமெரிக்கா உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள்தொகையை கொண்டது. பெரும்பாலானோர் ஐரோப்பிய (ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியர்) மற்றும் ஆப்பிரிக்க அடிமைகளாக கொண்டு வந்த ஆப்பிரிக்க வம்சாவளியினரும் ஆவர். 

* பூர்வகுடி மக்கள் மலைகளிலும், மழைக்காடுகளிலும் தங்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் காணப்படுகின்றன. 

– பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் “மெஸ்டிஜோ” என அழைக்கப்படுகின்றது. 

– ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது. 

– பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது. 

(முக்கிய இனங்கள்: அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள், கருப்பர்கள். கலப்பினங்கள்: மெஸ்டிஜோ, முலாடோ, ஸாம்போ)

IX. வரைபட திறன் 

1. பாடப்புத்தகம் மற்றும் நிலவரை படம் உதவிக்கொண்டு வட அமெரிக்காவை சுற்றியுள்ள கடல்கள், வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாகளை பெயரிடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

கடல்கள்:

* பசிபிக் பெருங்கடல் 

* அட்லாண்டிக் பெருங்கடல் 

* ஆர்க்டிக் பெருங்கடல் 

* கரீபியன் பெருங்கடல் 

* பியுபோர்ட் கடல்

* லாப்ரடார் கடல் 

* சலிக்கும் கடல் 

விரிகுடாக்கள்: 

* பேஃபின் விரிகுடா 

* ஹட்சன் விரிகுடா

* உங்காங் விரிகுடா 

* ஃபன்டி விரிகுடா 

* சீஸ்பெக் விரிகுடா 

வளைகுடாக்கள்: 

* பனாமா வளைகுடா

* கலிபோர்னியா வளைகுடா 

* அலாஸ்கா வளைகுடா

* மெக்சிகோ வளைகுடா

2. கொடுக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க வரைபடத்தில் அமேசான், ஓரினாகோ, நீக்ரோ, பராகுவே, உருகுவே ஆறுகளை குறிக்கவும். (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. சில முக்கிய நகரங்களும் சில தொழிற்சாலைகளும் அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். 

அ) பிட்ஸ்பர்க் (ஜவுளி, இரும்பு எஃகு, கப்பல் கட்டும் தொழில்) 

விடை: இரும்பு எஃகு 

ஆ) சிகாகோ (வாகனங்கள், காகிதம், சிமெண்ட்)

விடை: காகதம் 

இ) சிலி (எண்ணை சுத்திகரிப்பு, சர்க்கரை, பருத்தி ஆடை) 

விடை: எண்ணை சுத்திகரிப்பு 

ஈ) உருகுவே (தோல் பதனிடுதல் , தாமிரம் உருக்குதல், பால் பொருட்கள்)

விடை: பால் பொருட்கள் 

2. வினாக்களுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்குள் எழுதவும். 

அ) தென் அமெரிக்காவின் உயரமான சிகரம். 

விடை: அகான்காகுவா 

ஆ)தென் அமெரிக்காவிலுள்ள இயங்கும் எரிமலை.

விடை: கடோ பாக்ஸி 

இ) பரானா மற்றும் பராகுவே ஆறுகள் இணைந்து அழைக்கப்படுவது.

விடை: ஆற்றுபடுகை 

ஈ) உலகின் உயரமான நீர்வீழ்ச்சி.

விடை: ஏஞ்சல் 

உ) உலகின் மிகப்பெரிய நதி. 

விடை: அமேசான்

3. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களை ஒட்டி ஒரு தொகுப்பை உருவாக்கவும்.

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *