Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Human Organ Systems

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Human Organ Systems

அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்

மதிப்பீடு

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பாெருட்கள்_________

  1. ஆக்சிஜன்
  2. சத்துப் பாெருட்கள்
  3. ஹார்மாேன்கள்
  4. இவை அனைத்தும்

விடை : மைக்ராே மீட்டர்

2. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________

  1. இரைப்பை
  2. மண்ணீரல்
  3. இதயம்
  4. நுரையீரல்கள்

விடை : நுரையீரல்கள்

3. நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  1. தசைச்சுருக்கம்
  2. சுவாசம்
  3. செரிமானம்
  4. கழிவு நீக்கம்

விடை : செரிமானம்

II. சரியா? தவறா? 

1. இரத்தம் எலும்புகளில் உருவாகிறது.

விடை : தவறு

சரியான விடை : இரத்தம் எலும்பு மஜ்ஜைகளில் உருவாகிறது.

2. இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

விடை : தவறு

சரியான விடை :  கழிவு நீக்க மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

3. உணவுக் குழலுக்கு இன்னாெரு பெயர் உணவுப் பாதை. 

விடை : சரி

4. இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச் சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.

விடை : தவறு

சரியான விடை :  இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச் சிறிய நுண்குழலுக்கு தந்துகி என்று பெயர்.

5. மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்

விடை : தவறு

சரியான விடை : மூளை, தண்டுவடம். நரம்புகள் மற்றும் உணர்ச்சி உறுப்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது __________ மண்டலம் ஆகும்.

விடை : உறுப்பு

2. மனித மூளையை பாதுக்கும் எலும்புச் சட்டத்தின் பெயர் _________ ஆகும்

விடை : மண்டையாேடு

3.  மனித உடலிலுள்ள கழிவுப் பாெருட்களை வெளியேறும் முறைக்கு __________ என்றுபெயர்.

விடை : : கழிவு நீக்கம்

4. மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு ________ ஆகும்.

விடை : தாேல்

5. நாளமில்லா சுரப்பியில் சுரக்கப்படுகின்ற வேதிப் பாெருட்களுக்கு ___________ என்று பெயர்.

விடை : ஹார்மாேன்கள்

IV.பொருத்துக

1. காதுஇதயத் தசை
2. எலும்பு மண்டலம்தட்டையான தசை
3.உதர விதானம்ஒலி
4. இதயம்நுண் காற்றுப்பைகள்
5. நுரையீரல்கள்உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கின்றது

விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

V.  கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.

1. இரப்பை → பெருங்குடல் → உணவுக் குழல் → தாெண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்

விடை : வாய் → தாெண்டை → உணவுக் குழல் → இரப்பை → சிறுகுடல் → பெருங்குடல் →  மலக்குடல் → மலவாய்

2. சிறுநீர்ப் புறவழி → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்

விடை : சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி

VI. ஒப்புமை தருக

1. தமனிகள் : இரத்தத்தை இதயத்திலியிருந்து எடுத்து செல்பவை : : _____________________ இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருபவை

விடை :சிரைகள்

2. நுரையீரல் : சுவாச மண்டலம் :: _____________________ : இரத்த ஓட்ட மண்டலம்

விடை :இதயம்

3. நொதிகள் : செரிமான சுரப்பிகள் : : _____________________ : நாளமில்லாச் சுரப்பிகள்

விடை : ஹார்மாேன்கள்

VII. மிகக் குறுகிய விடையளி

1. எலும்பு மண்டலம் என்றால் என்ன?

நம் உடலில் உள்ள எலும்புகள், குருத்தெலும்புகள், மற்றும் மூட்டுகள்  ஆகிய அமைப்பு எலும்பு மண்டலம் எனப்படுகிறது

மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது. சில குருத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசை நார்கள் ஆகியவைற்றையும் எலும்பு மண்டலம் உள்ளடக்கியுள்ளது. இணைப்பு இழைகள் எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றன. தசைநார்கள் எலும்புகளை தசைகளுடன் இணைக்கின்றன.

எலும்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

  • அச்சுச் சட்டகம்
  • இணையுறுப்புச் சட்டகம்.

2. எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?

நமது மூச்சுக்குழலின் மேலே உள்ள குரல்வளை மூடி எபிகிளாட்டிஸ் என அழைக்கப்படுகிறது.

இது நாம் உணவை விழுங்கும்பாேது மூச்சுக்குழலை மூடி சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கிறது.

3. மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.

  • தமனிகள்
  • சிரைகள்
  • தந்துகிகள்

4. விளக்குக – மூச்சுக்குழல்

மூச்சுக்குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது. இது குரல்வளை மற்றும் தாெண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

5. செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.

  • சிக்கலான உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது
  • செரிக்கப்பட்ட உணவை உட்கிரகித்தல் போன்ற செயல்களைச் செய்கிறது.

6. கண்ணின் முக்கிய பாகங்களின் பெயர்களை எழுதுக.

கண் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

அவை

  • கார்னியா
  • ஐரிஸ்
  • கண்மணி (பியூப்பில்).

7. முக்கியமான ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.

உணர் உறுப்புகள் வெளி உலகின் சாளரங்கள் ஆகும். நமது உடலில் ஐந்து உணர் உறுப்புகள் உள்ளன.

அவை

  • கண்கள்
  • காதுகள்
  • மூக்கு
  • நாக்கு
  • தோல்

VIII. குறுகிய விடையளி

1.  விலா எலும்புக்கூடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.

விலா எலும்புக் கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த, தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது. அவை மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.

2. மனித எலும்பு மண்டலத்தின் பணிகளை எழுதுக.

  • எலும்பு மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள், மற்றும் மூட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
  • தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
  • நடத்தல், ஓடுதல், மெல்லுதல், போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.

3. கட்டுபடாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.

கட்டுப்படாத இயங்கு தசைகள்

மென்தசைகள் உணவுக்குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புக்களின் சுவர்களில் காணப்படும். இவை நம் விருப்பத்திற்கேற்பச் செயல்படாதவை. எனவே, இவை கட்டுப்படாத இயங்கு தசைகள் எனப்படுகின்றன.

கட்டுப்படாத இயங்கு தசைகள்

எலும்புத் தசைகள் நமது உடலில் உள்ள எலும்புகளுடன் இணைந்து செயல்படக் கூடியவை. நமது விருப்பத்திற்கேற்ப செயல்படுவதால், இவற்றை இயக்கு தசைகள் என்கிறோம்.

எ.கா: கைகளில் உள்ள தசைகள்

IX. விரிவான விடையளி

1. நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.

நாளமில்லா சுரப்பி மண்டலம்

உடலில் பல்வேறு செயல்களை நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஒழுங்குபடுத்தி, நமது உடலின் உட்புற சூழலைப் பராமரிக்கின்றது. உடலில் பல நாளமில்லாச் சுரப்பிகள் அமைந்துள்ளன. இச் சுரப்பிகள் ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

நாளமில்லா சுரப்பிகள்இருப்பிடம்
பிட்யூட்டரி சுரப்பிமூளையின் அடிப்பகுதி
பீனியல் சுரப்பிமூளையின் அடிப்பகுதி
தைராய்டு சுரப்பிமார்புக்கூடு
தைமஸ் சுரப்பிநியுக்ளியோலஸ் காணப்படும்
கணையம்வயிற்றின் அடிப்பகுதி
அட்ரினல் சுரப்பிசிறு நீரகத்தின் மேல்
இனப்பெருக்க உறுப்புகள்இடுப்புக் குழி


நரம்பு மண்டலம்

மனிதனுக்கு நன்கு வளர்ச்சியடைந்த நரம்பு மண்டலம் அமையப் பெற்றுள்ளது. நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம், உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் உள்ளன. நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.

நரம்பு மண்டலத்தின் செயல்கள்

1. உணர்ச்சி உள்ளீடு

உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்.

2. ஒருங்கிணைப்பு

உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைத்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பதில்களை உருவாக்குதல்.

3. செயல் வெளிபாடு

மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய

2. கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுது. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ. மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பாகம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.

கழிவு நீக்க மண்டலத்தில் சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.

ஆ. சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?

சிறுநீர் சிறுநீர் பையில் சேமிக்கப்படுகிறது

இ. மனித உடலிலிருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?

மனித உடலிலிருந்து சிறுநீர் சிறுநீர் புறவழி குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது

ஈ. சிறுநீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது?

சிறுநீரகத்திலுள்ள சிறுநீரை சிறுநீர்க்குழாய் குழல் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது

Buy Now
15% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
24% OFF
Product Image
Buy Now
18% OFF
Product Image
Buy Now
22% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image
Buy Now
26% OFF
Product Image
Buy Now
20% OFF
Product Image

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *