Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Animals Around Us

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்

அலகு 4

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்

கற்றல் நோக்கங்கள்:

❖ விலங்குகளை’ உற்றுநோக்கி பறவைகள், பூச்சிகள், பாலூட்டிகள் என அடையாளம் காணல், பெயர் கூறல். வேறுபடுத்தி அறிதல், விவரித்தல் மற்றும் ஒப்பிடுதல்

❖ விலங்குகளைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தங்களுக்குப் பிடித்த விலங்கினைப் பற்றிப் பேசுதல்

நாம் பேசுவோமா!

படத்தில் உள்ள விலங்குகளை உற்றுநோக்கவும், இந்த விலங்குகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை என்ன செய்கின்றன?

நாம் பேசுவோமா!

காங்கேயம் காளையை உற்றுநோக்கி அதன் பாகங்களை அறிவோமா!

‘திமில்

கொம்பு

தலை

கழுத்து

வால்

கால்

சொற்களஞ்சியம்

சிறிய, பெரிய, தலை, கண்கள், மூக்கு காதுகள்.வாய், பற்கள், நாக்கு,கொம்புகள். கழுத்து, நிறம் (வண்ணத்திட்டுகள் ), முடி, உரோமம், வால், கால்கள், திமில்.

 இப்போது மேலே உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பசுவைப் பற்றிஉங்களால் விவரித்துக் கூற இயலுமா?

மாடு பெரியது மற்றும் நீண்ட வால் கொண்டது. கொம்புகள் கூர்மையானவை. அதற்கு நான்கு கால்கள் உள்ளன. மாடு வெள்ளை நிறத்தில் இருக்கும்.

 உடல் பாகங்களை அவற்றின் பெயருடன் பொருத்துக.

 நீங்கள் பார்த்த விலங்குகளுக்கு (குறியிடுவோமா!

விலங்குகள்

பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. சில விலங்குகள் பெரியவை, சில பெரியவை அல்ல.

சில விலங்குகள் சிறியவை.

  உங்களுக்குப் பிடித்த விலங்கின் படத்தை ஒட்டவும்.

உங்களுக்குத் தெரியுமா

குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.

பாலூட்டிகள்

சில விலங்குகள் உடலின் மேல் முடி அல்லது உரோமத்தைக் கொண்டுள்ளன. இவை குட்டிகளை ஈன்று பாலூட்டும். இவை பாலூட்டிகள் என அழைக்கப்படும்.

நாய்கங்காரு மற்றும் யானை போன்றவை பாலூட்டிகள்.

சிலபாலூட்டிகள் பறக்கும்.

சில பாலூட்டிகள் நீந்தும்.

மனிதர்களும் பாலூட்டிகளே.

 படத்தில் உள்ள இரு விலங்குகளை ஒப்பிடுவோமா!

 ஒத்த மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை?

நீ கற்றறிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.

விலங்குகளின் வால்கள்

மகிழ்ச்சியான நிலையில் வாலை ஆட்டும் நாய்

தொந்தரவு தரும் பூச்சிகளை தன் வாலால் ஓட்டும் பசு

வாலை நிமிர்த்தி முறைக்கும் கோபமான பூனை

 கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிக்கவும்.

யானை, குதிரை, ஆடு, கோழி, மீன்

 விலங்குகளின் தலையுடன் அவற்றின் கால்களை இணைக்கவும்.

பறவைகள்

நாம் பேசுவோமா!

இந்தப் பறவைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவைகளை எங்கே பார்த்திருக்கிறீர்கள்?

மயில் குருவி கழுகு காகம்

கிளி வாத்து புறா மீன்கொத்தி

சேவல் மைனா மரங்கொத்தி

பறவைகளின் பெயர்களைக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசலாமா!

சொற்களஞ்சியம்

அளவு. நிறம், இறக்கைகள். கால்கள், அலகு, இறகுகள், பாதம்.

பறவையை உற்றுநோக்கி அதன் பாகங்களை அறிவோமா!

நாம் பேசுவோமா!

பறவைகளின் ஒத்தவேறுபட்ட பண்புகளைப் பற்றி பேசலாமா!

 பறவையை அதன் பெயருடன் இணைப்போமா!

பறவைகளும் விலங்குகளே

இவை இரண்டு இறக்கைகள், இரண்டு கால்கள் மற்றும் ஓர் அலகினைக் கொண்டுள்ளன.

இவை தங்கள் அலகுகளின் உதவியோடு உண்ணுகின்றன. இவற்றிற்குப் பற்கள் கிடையாது,

இவற்றின் கால்கள் ஓடுவதற்கும் நடப்பதற்கும் பயன்படுகின்றன.

இவை வண்ணமயமான இறகுகளைப் பெற்றுள்ளன.

இவற்றால் பறக்கவும் முடியும்.

சில பறவைகளால் பறக்க இயலாது.

ஈமு கிவி பென்குவின் நெருப்புக்கோழி

சில பறவைகளால் நீந்த இயலும்.

வாத்து அன்னம் நீர்க்கோழி

 பறக்க இயலும் பறவைகளுக்கு (குறியிடவும்.

 பறவையை அதன் அலகுபாதத்துடன் இணைக்கவும்.

 கட்டை விரல் ரேகை அச்சிடுதல்

உன் கட்டை விரல் ரேகையைப் பயன்படுத்தி படங்களை முழுமைப்படுத்தவும்.

 பூச்சிகள்

பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்க்கவும்எத்தனை பூச்சிகளை உங்களால் பார்க்க முடிகிறதுநீங்கள் பார்த்த பூச்சிகளுக்கு (குறியிடவும்.

பூச்சிகளின் படங்களைப் பார்க்கவும்.

பூச்சிகள் ஆறு கால்களை உடைய மிகச் சிறிய விலங்குகள். சில பூச்சிகளுக்கு இறக்கைகள் உண்டு. அவை பறக்க உதவுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா

பூக்களின் சிறந்த நண்பன் வண்ணத்துப்பூச்சி.

சில சிறிய விலங்குகள் பூச்சிகள் இனத்தைச் சேர்ந்தவை அல்ல. இவை ஆறுகால்களுக்கு மேல் பெற்றுள்ளன.

சில பூச்சிகளால் பறக்க இயலாது.

நாம் செய்வோமா!

சிறிதளவு சர்க்கரையை ஓரிடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்கவும். என்ன நிகழ்கிறது என்பதை உற்றுநோக்கவும்?

பூச்சிகளைக் கண்டுபிடிப்போமா!

சில பூச்சிகள் இலைகுச்சி போன்று காணப்படுகின்றன.

 புள்ளிகளை இணைத்து படங்களுக்கு வண்ணமிடுவோமா!

விலங்குகள் பராமரிப்பும் பாதுகாப்பும்

நாம் பேசுவோமா!

இந்தப் பறவை சந்தோஷமாக உள்ளதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இல்லை. கிளி சுதந்திரமாக இருக்க விரும்புகிறது மற்றும் மகிழ்ச்சியாக உலாவ வேண்டும்.

பறவைக்கு நீர் வைத்தல்

ஒரு மண் பாண்டத்தில் நீரை ஊற்றிப் பறவைகள் அருந்த வைக்கவும். அவை எவ்வளவு ஆனந்தம் அடைகின்றன என்பதை உற்றுநோக்கு.

நம்மைச் சுற்றி உள்ள விலங்குகளை நாம் எவ்வாறு பராமரிக்கலாம்?

 விடுகதைகளின் விடையை அறிந்து கொடுக்கப்பட்டுள்ள சரியானப் படத்துடன் இணைப்போமா!

1நான் மரத்தில் வாழ்கிறேன்மரத்தில் ஏற விரும்புவேன்வாழைப்பழங்கள் எனக்குப் பிடிக்கும்நான் யார்?

விடை : குரங்கு

2நான் காட்டில் வாழ்கிறேன்எனக்கு கூர்மையான பற்கள் உண்டுமக்கள் என்னை “காட்டின் ராஜா” என்பர்நான் யார்?

விடை : சிங்கம்

 3எனக்குக் கால்கள் இல்லைஆனால் நான் நிலத்தின் மீதும் மரத்தின் மீதும் வளைந்து நெளிந்து நகர்வேன்நான் யார்?

விடை : பாம்பு

 4. நான் பறவை அல்லஆனால் என்னால் பறக்க முடியும்நான் பூக்களிலிருந்து தேன் சேகரிப்பேன்நான் யார்?

விடை : தேனீ

5நான் ஒரு பாலூட்டிஎனக்குப் பெரிய காதுகள் உண்டுஎனக்கு ஒரு நீளமான துதிக்கை உண்டுநான் நான்கு கால்களால் நடப்பேன்நான் யார்?

விடை : யானை

 “நான் யார்விளையாடுவோமா! ( ஆசிரியர் உதவியுடன்)

 காகித முகமூடி செய்வோமா!

இப்பொழுது நீங்கள் செய்த காகித முகமூடியை அணிந்து நாடகம் நடிப்போமா!

 நீங்களே விடுகதை தயாரித்து உங்கள் நண்பரிடம் கேளுங்களேன்!

 விலங்குகளைப் பராமரிக்க நாம் செய்ய வேண்டிய செயல்களுக்கு அருகில் உள்ள வட்டத்தில் மட்டும் வண்ணமிடுவோமா!

வேடிக்கை வினோதப் பகுதி

படத்தில் எது தவறு எனக் கண்டறிந்து சிரித்து மகிழலாமா!

மதிப்பீடு

 இந்தப் படங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளை நாம் எவ்வாறு பராமரிக்கலாம் என்பதைப் பற்றிக் கூறுக.

நாயை குளிக்க வத்தல்

கால்நடை மருத்துவர் நாயை பரிசோதிக்கிறார்

 கீழே கொடுக்கப்பட்டுள்ள காட்டில் உள்ள விலங்குகளைக் கண்டுபிடித்துப் பெயர் கூறவும்மேலும்அவை பறவைகளாபூச்சிகளா அல்லது பாலூட்டிகளா என்பதையும் வகைப்படுத்தவும்.

பறவைகள்

1. கிளி

2. ஆந்தை

3. மயில்

4. வாத்து

5. மரம்கொத்தி

6. காகம்

7. வாத்து

பூச்சிகள்:

1. பட்டாம்பூச்சி

2. டிராகன் ஈ

பாலூட்டிகள்

1. யானை

2. குரங்கு

3. முயல்

4. அணில்

5. மான்

 படத்தில் எந்தெந்த விலங்குகளின் பாகங்கள் உள்ளன எனக் கண்டறிந்து (குறியிடுவோமா!

தன் மதிப்பீடு

❖ என்னால் சில விலங்குகளை உற்றுநோக்கி பெயர்களைக் கூற இயலும்.

❖ என்னால் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகளை அடையாளம் கண்டு வேறுபடுத்த இயலும்.

❖ என்னால் விலங்குகளை ஒப்பிட்டு விவரிக்க இயலும்.

❖ என்னால் சிந்தித்து வரிசைப்படுத்தவும், புதிர்களை விடுவிக்கவும், பொருத்தவும் இயலும்.

❖என்னால் விலங்குகளைப் போல் நடிக்க இயலும்.

❖ என்னால் விலங்குகளை அன்பாக பராமரிக்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top