Samacheer Kalvi 5th Science Books Tamil Medium Science in Everyday Life
அறிவியல் : பருவம் 1 அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் அலகு 4 அன்றாட வாழ்வில் அறிவியல் கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன ❖ தமிழ்நாட்டின் அறிவியல் அறிஞர்களைப் பற்றி புரிந்துகொள்தல். ❖ வானம் நீல நிறமாகத் தோன்றுவதற்கான காரணத்தை அறிதல். ❖ நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் மீளக்கூடிய மற்றும் மீளா நிகழ்வுகளைப் பற்றி அறிதல். ❖ வீடு மற்றும் பள்ளி வளாகங்களில் வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வு பெறுதல். அறிமுகம் நமது அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிவியல் நமக்கு உதவியுள்ளது. இது நமது அன்றாட வாழ்வையும் மாற்றியுள்ளது. நாம் வாழக்கூடிய உலகம் முன்பு இருந்ததுபோல் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கூட இது மாறிக்கொண்டிருக்கிறது. நம்மைச்சுற்றி அநேக மாற்றங்களை நாம் காண்கிறோம். அவற்றுள் சில மீளக்கூடியவை, சில மீளாதவை. கழிவுப் பொருள்களை எரிப்பது போன்ற மீளா வினைகள் நமது வீடு மற்றும் பள்ளி வளாகத்தை அசுத்தமடையச் செய்கின்றன. கழிவுப் பொருள்களை நிர்வகிப்பது மற்றும் அவற்றை முறையாக அகற்றும் முறை பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. அவற்றைப் பற்றி இப்பாடத்தில் காண்போம். I. தமிழ்நாட்டு அறிவியலாளர்கள் பணடைய நாள்கள் முதலே தமிழ்நாடு நீண்ட அறிவியல் வரலாற்றைக் கொண்டுள்ளது. பண்டைய கால தமிழ் இலக்கியங்களில் அநேக அறிவியல் கருத்துக்களைக் காணமுடியும். அறிவியலுக்கு அநேக வகையில் பங்களித்துள்ள பல்வேறு அறிவியலாளர்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் தோன்றிய பல்வேறு அறிவியலாளர்கள் மற்றும் அவர்களது பங்களிப்பு பற்றிய தகவல்களை கீழ்க்கண்ட அட்டவணை தருகிறது. 1. சர். C.V, இராமன் (1888-1970) சந்திரசேகர வெங்கடராமன், 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள திருச்சியில் பிறந்தார். 1904 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (B.A) பெற்றார். இயற்பியலில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். 1907 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலில் முதுகலைப்பட்டத்தைப் (M.Sc.) பெற்றார். ஒளிச்சிதறல் பற்றிய இவரது ஆய்விற்காக, 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை சர்.C.V. ராமன் பெற்றார். வானம் நீல நிறமாகத் தோன்றுதல் 1921 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஒருநாள் மத்திய தரைக்கடலின் நடுவே சென்று கொண்டிருந்த கப்பலின் மீது சர்.C.V. இராமன் அமர்ந்து கொண்டிருந்தார். வானம் நீல நிறமாகத் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டிருந்த அவர், அதற்கான காரணத்தை ஆராய்ந்தார். காற்றிலுள்ள வாயுக்கள் மற்றும் துகள்களால் தான் ஒளிச்சிதறல் ஏற்படுகிறது என அவர் தீர்மானித்தார். நாம் காணக்கூடிய ஒளி நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு (VIBGYOR) போன்ற பல்வேறு வண்ணங்களால் ஆனது. இந்த நிறங்களுள், ஊதா நிறமே அதிகளவு சிதறலடைகிறது. இக்காரணத்தினால்தான் அநேக நேரங்களில் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது. சூரிய உதயம் மற்றும் மறையும் நேரங்களில், சூரியக் கதிர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும்போது சிவப்பு வண்ணத்தைத் தவிர பிற வண்ணங்கள் சிதறலடைந்து விடுகின்றன.எனவே, சூரிய உதயம் மற்றும் மறைவின்போது வானம் சிவப்பு நிறமாகத் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரியுமா? 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் சர்.சி.வி. ராமன் என்ற அறிவியலாளர் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததை நினைவுகூறும் விதமாக அந்த நாள் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2. Dr. A.P.J. அப்துல் கலாம் (1931-2015) அவுல் பக்கிர் ஜைனுலாப்தீன் அப்துல்கலாம் ஒரு வானூர்தி அறிவியலாளர். அவர் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தார். 1954 ஆம் ஆண்டு, திருச்சியிலுள்ள புனித வளனார் கல்லூரியில், அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.Sc.,) பெற்றார். 1960 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வானூர்தி பொறியியல் (Aeronautical Engineering) பட்டம் பெற்றார்.. இவர் இந்தியாவின் ஏவுகணை தயாரிப்புத் திட்டப் பணிகளை மேற்கொண்டதால், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என் அழைக்கப்பட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக (2002 – 2007) பதவி வகித்த இவர் மக்களின் குடியரசுத் தலைவர் என அழைக்கப்பட்டார். இவருக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும், 1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டன. அக்னிச் சிறகுகள், இலக்கு 2020 மட்டும் எழுச்சியூட்டும் எண்ணங்கள் போன்ற புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். II. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் பொருள் ஒன்று ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பிற்கு மாறுவதையே மாற்றம் என்கிறோம். இரவு – பகல், கோடைகாலம் – குளிர்காலம் இது போன்ற பல மாற்றங்களை நாம் காண்கிறோம். பொருள்களிலும் மாற்றங்களை நாம் காண்கிறோம். உன்னிலும் மாற்றத்தை நீ காணலாம். உன்னுடைய நகமும் முடியும் வளர்கின்றன; உனது உயரமும் எடையும் அதிகரிக்கின்றன; சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு முற்றிலுமாக 6 மாற்றமடைந்துள்ளாய். மாற்றங்கள் அனைத்தையும் மீள் மாற்றங்கள் மற்றும் மீளா மாற்றங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். 1. மீளக்கூடிய மாற்றங்கள் மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. சிறிதளவு நீரை உறைவிப்பானில் (freezer) வைக்கும்பொழுது, அது பனிக்கட்டியாக மாறுகிறது. அதை வெளியே எடுக்கும்போது, மீண்டும் நீராக மாறிவிடுகிறது. இது மீள் மாற்றமாகும். 2. மீளாத மாற்றங்கள் மறுதலையாக நிகழாத மாற்றங்கள் மீளாத மாற்றங்கள் எனப்படும். ஒரு காகிதத் துண்டை எரிக்கும்போது, அது சாம்பலாக மாறிவிடுகிறது. அது மீண்டும் காகிதமாக மாற முடியாது. இது ஒரு மீளாத மாற்றமாகும். உங்களுக்குத் தெரியுமா? மீளாத மாற்றங்கள் நிலையான மாற்றங்கள் எனவும் வழங்கப்படுகின்றன. வெப்பப்படுத்துதல், எரித்தல், கலத்தல் மற்றும் பொடியாக்குதல் ஆகியவை நிலையான மாற்றத்தை உண்டாக்குகின்றன. செயல்பாடு 1 மீள் தன்மை கொண்ட நீட்சிப் பட்டை ஒன்றை (Elastic bond) முடிந்த அளவு இழுக்கவும். பிறகு அதனை விட்டுவிடவும். நீ என்ன உற்றுநோக்குகிறாய்? அதனை பல துண்டுகளாக நறுக்கவும். இப்பொழுது அந்தப் பட்டையை மீண்டும் திரும்பப் பெறமுடியுமா? விடை : முடியாது […]
Samacheer Kalvi 5th Science Books Tamil Medium Science in Everyday Life Read More »