Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Work and Energy
அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல் அலகு 3 வேலை மற்றும் ஆற்றல் கற்றல் நோக்கங்கள் இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்கள் ❖ வேலையை வரையறுத்தல். ❖ வேலை மற்றும் ஆற்றலை அறிந்து கொள்ளல். ❖ எளிய இயந்திரங்களை அறிதல். ❖ இயந்திரங்களை வகைப்படுத்துதல் ❖ மூன்று வகையான நெம்புகோல் பற்றி தெரிந்து கொள்ளல். நினைவுகூர்வோமா! ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே, நீங்கள் விசையைப்பற்றி முந்தைய வகுப்பில் படித்துள்ளீர்கள் அல்லவா? விசை என்றால் என்ன? மாணவர்கள் : ஒரு பொருளை நகர்த்துவதற்கு மற்றும் நிறுத்துவதற்கு அதன் மீது செய்யப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயலே விசை ஆகும். ஆசிரியர் : பல்வேறு வகையான விசைகள் உள்ளன. அவை யாவை? மாணவர்கள் : உராய்வு விசை, ஈர்ப்பு விசை, தசை நார் விசை மற்றும் காந்த விசை. விசையின் மூலம் ஒரு பொருளின் வடிவம், வேகம் அல்லது திசையை மாற்ற முடியும். I. வேலை ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும். கீழ்க்கண்ட படங்களை உற்றுநோக்கி நீங்கள் புரிந்து கொண்டதைக் கூறுங்கள். இந்தப் படங்களிலிருந்து ‘வேலையைச் செய்ய விசை தேவை‘ என்பது நமக்குத் தெரிகிறது. சிந்தித்துக் கூறுவோமா! ஆசிரியர்: நேற்று நான் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது சாலை அமைக்கும் பணியை சிலர் செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த இடத்தில் சில பொருள்கள் இருப்பதையும் கண்டேன். அந்த இடத்தில் என்னென்ன பொருள்கள், இயந்திரங்கள் இருந்திருக்கும் என்று உங்களால் கூற முடியுமா? வேலை செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படவில்லையா என்று எப்போது நம்மால் கூறமுடியும்? வேலை செய்வதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் தேவை. 1. ஒரு விசை பொருளின் மீது செயல்பட வேண்டும். 2. பொருள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும். ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அந்தப் பொருள் நகர்ந்தால் வேலை செய்யப்பட்டது எனலாம். பதிலளிப்போமா!” படத்தை உற்றுநோக்கி, வேலை செய்யப்பட்டிருந்தால் (✔) குறியும், வேலை செய்யப்படவில்லை என்றால் (x) குறியும் இடுக. பதிலளிப்போமா! கீழ்க்கண்ட செயல்பாடுகளில் வேலை செய்யப்பட்டதா அல்லது செய்யப்படவில்லையா என்பதைக் குறிப்பிடுக. II. ஆற்றல் மேற்கண்ட படங்களில் ☆ ஒரு மனிதர் பயணச் சுமையை இழுக்கிறார். இழுப்பதற்கு அவருக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. உணவிலிருந்து அவர் அந்த ஆற்றலைப் பெறுகிறார். ☆ எரிபொருள் எரிவதால் ஏற்படும் ஆற்றலைக் கொண்டு மகிழுந்து நகர்கிறது. ☆ மின்சாரத்தை ஆற்றலாகப் பயன்படுத்தி நகரும் படிக்கட்டு இயங்குகிறது. வேலை செய்வதற்கான திறனையே ஆற்றல் என்கிறோம். வேலை நடைபெறுவதற்கு ஒரு பொருளுக்கு ஆற்றல் கொடுக்கப்படவேண்டும். 1. புதுப்பிக்க இயலும் வளங்கள் புதுப்பிக்க இயலும் ஆற்றல் வளங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இயற்கையாகவே புதுப்பிக்கப் படுகின்றன. இந்த ஆற்றல் வளங்களை நாம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த முடியும். இவ்வளங்களைப் புதுப்பிக்க இயலும் வளங்கள் என அழைக்கிறோம். ஒளி, போக்குவரத்து, சமையல், வெப்பப்படுத்துதல் போன்றவற்றிற்கு இந்த வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா:சூரியன், காற்று, நீர், 2. புதுப்பிக்க இயலாத வளங்கள் சில வளங்களைப் பயன்படுத்திய பிறகு அவற்றை மீண்டும் புதுப்பிக்க இயலாது. இவ்வளங்களைப் புதுப்பிக்க இயலாத வளங்கள் என அழைக்கிறோம். எ.கா: பெட்ரோல், நிலக்கரி, இயற்கை வாயு. மேலும் தெரிந்து கொள்வோமா! “ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றமுடியும்” என்று ஆற்றல் அழிவின்மை விதி கூறுகிறது. ஆற்றலின் திட்ட அலகு ஜூல் ஆகும். ஆற்றல் பற்றி விளக்கமளித்த ஜேம்ஸ் ஜூல் என்பவரது பெயரால் ஆற்றலின் அலகு ஜூல் என அழைக்கப்படுகிறது. III. எளிய இயந்திரம் மேற்கண்ட படங்களை உற்றுநோக்குக. அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? […]
Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Work and Energy Read More »